Saturday, January 20, 2018

செல்லாத ருபாய் நோட்டுக்கள்

அரசு  நவம்பரில் புழக்கத்தில் இருந்த  15.44 லட்சம் கோடி ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவித்தது
அதில் ஜூன் வரை 15.28லட்சம் கோடி ருபாய் ரிசர்வ் பாங்கிற்கு திரும்பி வந்து விட்டது.
தவிர 4 கோடி கூட்டுறவு வங்கிகளிடமிருந்து திரும்ப ஏற்றுக்கொள்ள ரிசெர்வ் பாங்க சம்மதித்தது
தற்போது லக்னோவில்  Rs100கோடி பிடி பட்டுள்ளது .
இவ்வளவு பணம் திரும்பி வருவது எப்படி சாத்தியம்?
 500ரூபாய் நோட்டு 1985 வருடம் முதல் புழக்கத்தில் வந்தது
 1000ரூபாய் நோட்டு 2000வருடம் முதல் புழக்கத்தில் வந்தது.
புழக்கத்தில் எதுவுமே முடங்கவில்லையா?
புழக்கத்தில் விட்ட மொத்த பணமும் திரும்பி வந்து விட்டதா?
இவ்வளவு பணம் திரும்பி வந்தது  சற்று நம்ப முடியாத விஷயம் .
 அப்துல் கரீம் தெல்கி யை தெரியுமல்லவா? முத்திரை பத்திரம் கள்ள மார்க்கட்டில்  எவ்வளவு அச்சிடப்பட்டது என்பதே யாருக்கும் தெரியாது. பழைய அரசு அச்சு எந்திரங்களை வாங்கி அதைக்கொண்டு முத்திரை பத்திரங்களை அச்சடித்து புழக்கத்தில் விட்டார். கடைசி வரை அப்படி புழக்கத்தில் வந்த பத்திரங்களின் மதிப்பு யாருக்கும் சரியாகத்தெரியாது.
இப்போது ரூபாய் நோட்டு அச்சடிக்கும் Printing Press ல் நடந்துள்ள களவில் ஒரு பாதுகாப்பு அதிகாரி பிடி பட்டுள்ளார், ரிசர்வ் பாங்க் அந்த அச்சகம் தமது கட்டுப்பாட்டில் இல்லை என தெரிவித்துள்ளது. அது அரசு நிறுவனம் எனில் எத்தகு ஊழலுக்கு ஆளாகும் என்பது  ...
ஆகவே பண மதிப்பிழபிறகான  காரணிகள் வேறாக இருக்க வாய்ப்பிருக்கிறது